தோப்பில் யாப்பில் நீபேச

தோப்பில் தென்னங் கீற்றில்
தென்றல் இசைபாட
யாப்பில் வெண்பாவை செப்பல்
ஓசையில் நீபேச
சேப்பில் செந்தாமரை மடல்விரிந்தாற்
போலழகில் நீவந்தாய்
யாப்பின் பாவும் பாவினமும்
என்நாவில் ஊறுதடி
தோப்பில் தென்னங் கீற்றில்
தென்றல் இசைபாட
யாப்பில் வெண்பாவை செப்பல்
ஓசையில் நீபேச
சேப்பில் செந்தாமரை மடல்விரிந்தாற்
போலழகில் நீவந்தாய்
யாப்பின் பாவும் பாவினமும்
என்நாவில் ஊறுதடி