ஆடும்மயில் மீத மர்ந்தே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(தேமாங்கனி மா தேமா அரையடிக்கு)
ஆடும்மயில் மீத மர்ந்தே
..ஆவல்மிக வோடி யிங்கு
வேடர்மக ளோடு வந்து
..வீணர்களைத் தான ழித்து
வாடும்மகள் பிழைபொ றுத்து
..வாசல்வர வேண்டு கின்றேன்
பாடும்பணி யைத்தா வேலா
..பாதம்பணிந் திடுவேன் யானே!
- சியாமளா ராஜசேகர்