தமிழர் தெய்வம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சிந்தையை நிறுத்தி உந்தை
.....சிவனுடன் பொருத்தி வைப்பாய்
நிந்தனை யொருவர் சொல்லா
......எந்தனை தினமும் காப்பாய்
விந்தையாய் விளைந்த எந்தை
.... செந்திலாண் டவனே கந்தா
முந்தையெந் தமிழ்வேள் காப்பாய்
......மூத்த்வர்க் கிளையோய் போற்றி
......