துரோகியடா நீ......!!

அந்த சூரியன் கலங்கப்பட்டு போனது
ஏழு வானமும் ஒருகணம் நடுநடுங்கி போயின
பிரிவை சுமக்கமுடியாத - என்
ஒப்பாரியின் ஓலம் கேட்டு......

விதி கூட அதிர்ச்சியுற்று போனது - அது
வரைந்த தீர்ப்பினை எண்ணி
வெட்கப்பட்டு தலைகுனிந்து கொண்டது
துடிதுடித்து சாவதற்கா
உன்னை காதலித்தேன்.....?



பொங்கிப் பிரவகிக்கும் நினைவுகளையும்
கண்ணீரையும் கட்டுப்படுத்த முனைந்து
தோற்றுப்போனேன்....
விக்கித்து அழுவதிலும்
விழிநீரை துடைப்பதிலும்
எத்தனையோ இரவுகளில்
தூக்கத்தை தொலைத்துவிட்டேன்........



உன்னை மறக்க நினைத்து
எனக்குள்ளே மாபெரும் போராட்டங்கள் நிகழ்த்திய போதும்
இரத்தக்கண்ணீர் சேற்றில்தான்
ஒவ்வொரு முறையும் தத்தளித்து மீண்டேன்......


என் வாழ்வு சுமக்கும் கண்ணீரின் ஈரம்
உன் மனச்சாட்சிக்கு பாரமாகலாம்
உயிரில் எழுதப்பட்ட உன் நினைவுகளை
மறக்க வேண்டுமெனில்
சத்தியமாக நான்
செத்தே ஆகவேண்டும்...



வானம் பூமியாவும்
விக்கித்து நிற்க
உரத்துக் கதறுகிறேன்
உயிரானவலை சிறிது சிறிதாக
சித்திரவதை செய்து
என் உயிரை உறிஞ்சிக்குடித்துக் கொண்டிருக்கும்
துரோகியடா நீ......!!






எழுதியவர் : pirinthaa(ammu) (8-Oct-11, 10:24 pm)
பார்வை : 381

மேலே