கவிதா நதி தீரத்திலே கம்பனின் கோசலம்

வண்மை யில்லைஓர் வறுமை யின்மையால்
திண்மை யில்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை யில்லைபொய் உரையி லாமையால்
ஒண்மை யில்லைபல் கேள்வி ஒங்கலால்


வண்மை யிலைஓர் வறுமை யிலாமையால்
திண்மை யிலைநேர் செறுநர் யிலாமையால்
உண்மை யிலைபொய் உரையே யிலாமையால்
ஒண்மை யிலைகேள் வியால்

---வண்மை = மற்றவரிடம் கையேந்தி இரத்தல் -
---திண்மை = வலிமை
----உண்மை அறிவோம் நாம்
---ஒண்மை = உயரிய அறிவு
இரப்போர் இல்லை அந்நாட்டில் வறுமை இல்லாததால்
எல்லோருமே செல்வ செழிப்புள்ளவர்கள்
--- செறுநர் --எதிர்த்து போரிடுவோர்களே இல்லை
எல்லோருமே வலிமை பெற்றவர்கள் ஆதலால்

----பொய்யுரையே இல்லாதபோது உண்மைக்கென்று யாரை
அடையாளம் காட்டுவது
---எல்லோருமே கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அப்படியிருக்க
ஒண்மை பேரறிவு படைத்தவன் என்று ஒருவனை மட்டும்
சுட்டிக் காட்டமுடியுமா ?
கம்பன் இவ்விருத்தத்தில் கோசல நாட்டை IDEAL STATE ஆக
UTOPIAN STATE ஆக எல்லாம் முழுமையாக அமைந்த நாடாக
காட்டுகிறார்
விருத்தம் எளிமையான சீரமைப்பு கொண்டிருப்பதால்
சற்று மாற்றி கம்பனின் சொல்லாடல் கொண்டு வெண்பா வடிவிலும் வடிவமைக்க முடிந்தது.
பயில்வோர் இதுபோல் முயலலாம்
எல்லா விருத்தங்களையும் இவ்வாறு அமைத்தல் எளிதல்ல
இது கம்பனில் நான் ரசித்த கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-22, 10:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே