தீபாவளி

தீபாவளி

தீபா வளிநல்ல தீபவழி திருவிழா
நினத்திட இனிக்கும் இந்திய சிறார்க்கும்
அங்க வங்க அஸ்ஸாம் மிசோராம் யென்வெங்கும்
தவறாக் கொண்டாடுங் பரதநாட்டுத் திருவிழா
பட்டாசு சுடன்புத்தா iடைஇனிப்பும் நினைப்பில்
வந்திடும் ஒரேத் திருவிழா
நினைக்க நினைக்க இன்பம் தருமே


முந்தினமே குடும்பத்தின் தலையப் பாவிடம்
எனக்கது உனக்கெது எனவேபட் டியலிட்டு
கடைவீதி புகுந்து சேர்த்து வைத்தயெம்
பணத்தை தண்ணீராய் செலவு செய்து
புத்தாடை பட்டாசு டனேசேட்டு கடையல்வா
வெனவெல் லாமும் வாங்கி
வீடுவந்துப் பிரித்து மகிழமணி பதினொன்றே




இரவெல்லாம் அரைத்தூக்கம் எங்கோ பட்டாசு
எழுந்து எழுப்பினேன் அனைவரை அம்மாவும்
சுடுநீர் வைத்து வீதிகூட்டி பெரிய
வண்ணக் கோலமிட்டு முடிக்குமுன் தலைமுதல் அடிப்பாதம் வரையப்பா எண்ணெய்
தேய்த்து எல்லாரை யுங்குளிக்க வைத்தார்
சூரியன் வருமுன் புத்தாடை யுடுத்தி
பாட்டசை கொளுத்தினோம் தம்பியின் வெடியை
அண்ணன் நானும் வெடித்தோம் தங்கை
மத்தாப்பும் சுறுசுறா கொளுத்தத்
தீர்ந்தது பாதில் பட்டாசுமே
மினுக்கும் சேலைவேட்டி யிலம்மா அப்பாவே


இடையில் அம்மா இட்லி பூரிக்குர்மா
வடையுடன் சுடச்சுட கொணர்ந்தாள் ஆப்பம்
எல்லோரும் அமர்த்து சாப்பிட்டோம் ருசித்து
மீண்டும் அன்று ஒன்று ஒன்றாக
வெடித்தோம் மாலை வந்ததும் இனிப்பு
தந்தாள் எங்களின் உறவினர் பலரும்
வந்தார் அம்மாவும் இனிப்பு தந்தார்
இரவில் பூத்தொட்டி சங்கு சக்கரம்
கலரில் மத்தாப்பும் வெடியும் வானத்தில்
விட்டு வெடித்தோம் மகிழ்ந்தோம்
என்றும் நாங்களெல்லாம் மகிழ்வோம் அதைநினைத்தே

புதுமணத்தம் பதியர்க்கு இதுத்தலைத் தீபாவளி
மாப்பிள்ளை மகளுக்கு விலையில் பட்டு
வேட்டி சேலை மோதிரம் வெள்ளி
தூக்கில் நெய்யும் கேட்ப தெல்லாமும்
கொடுக்க வேண்டுவர் முடியா
தென்றால் பட்டாசு வெடிக்கும் பாரே



......

எழுதியவர் : பழனி ராஜன் (23-Oct-22, 11:51 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : theebavali
பார்வை : 173

மேலே