கண்களிலே காதலையே காண் - நேரிசை வெண்பா
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)
வண்ணமய நீள்வானில் வாள்விழிகள் நின்றிசைக்க
வெண்மையுள தாரகையாய் வெண்பற்கள் - தண்மைகொள
வெண்ணிலவும் வானத்தில் வீதியுலாச் சென்றுவரக்
கண்களிலே காதலையே காண்!
- வ.க.கன்னியப்பன்