தேனிதழை பார்த்து மகிழ்ந்தேன்

வாடி நின்ற மலர்களை
தென்றல் மலர்த்தியது
வாடாத மலருன்னை
தென்றல் தழுவி நின்றது
பாடி வந்த வண்டுகள்
தேனிதழ்கள் உனதா
மலரதா என்று
திகைத்து நின்றது
பாடிவந்த கவிஞன் நானும்
தேனிதழை பார்த்து மகிழ்ந்தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-22, 9:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே