நிறைநிலா போன்றநீ காணடி கண்மணி

குறையும் போதினில் காண்பாய் பிறைநிலா
நிறைவில் நினைவில் நிற்கும் நெஞ்சநிலா
மறையின் வானில் முழுதும் முழுஇருள்
நிறைநிலா போன்றநீ காணடி கண்மணி

---குறை நிறை மறை பிறை என்ற ஒரே அடி எதுகை
அமைந்து எல்லா அடிகளிலும் முற்று மோனை அமைந்து
எழில் கூட்டுவதை காணவும்
அடியின் அனைத்துச் சீர்களிலும் மோனை அமையின்
அது முற்று மோனை

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-22, 5:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே