காதல் லட்சியம் கனவு நீ 💕❤️
காலம் நேரம் தேவையில்லை
உன் கனவுக்கு எல்லையில்லை
பாதை மாறி போகவில்லை
பார்ப்பது எல்லாம் உண்மை இல்லை
நேர்மை நியாயம் மறக்க வில்லை
மற்றவர்களை ஏமாற்றி வாழ
நினைக்கவில்லை
நம்பிக்கையை நான் விடவில்லை
வலியில்லாமல் யாரும் பிறப்பது
இல்லை
இரவும் நிலவும் பிரிவது இல்லை
கதிரவனை யாரும் வர தடுப்பது
இல்லை