மதுரை நகர் ஜிகர்தண்டா

குதிரைபோல் நீநடந்து செல்லும் அழகில்
மதுரை நகர்ஜிகர் தண்டா அருந்தும்
குளிர்ச்சி மனம்முழு தும்

குதிரைபோல் நீநடந்து செல்லும் அழகில்
மதுரை நகர்ஜிகர் தண்டா அருந்தும்
குதுகலம் என்மன தில் !

தலைப்பின் குறிப்பு :

மீனா ஆலயத் தரிசனத்திற்கு வந்திருந்த போது
மதுரை வீதிகளில் மூலைக்கு மூலை
பார்த்த குளிர் பானக் கடை
தமிழ் குடியிருக்கும் மதுரையில் குளிர் குடியிருக்கும்
குளிர்நீர் அங்காடி !
தமிழக நகர்களில் எல்லாம் மற்ற போதை பானங்கள் அன்றோ
குடி இருக்கிறது குடி கெடுக்கிறது !!!

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-22, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே