திடலில் சிலையாய்

விளையாடி விளையாடி ஓய்ந்து
வியர்வையில் முழுஉடல் நனைந்து
விறுவிறு நடையில் தேவதை - என்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை
ஓரெழுத்தும் மொழியவில்லை - ஏனோ
கருங்கல்லாகி நிற்கிறேன்!
வரம் பெற்றேனா? சாபம் பெற்றேனா?
விளையாடி விளையாடி ஓய்ந்து
வியர்வையில் முழுஉடல் நனைந்து
விறுவிறு நடையில் தேவதை - என்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை
ஓரெழுத்தும் மொழியவில்லை - ஏனோ
கருங்கல்லாகி நிற்கிறேன்!
வரம் பெற்றேனா? சாபம் பெற்றேனா?