கடவுள் தந்தக் கம்ப்யூட்டர்

நேரிசை ஆசிரியப்பா

வீட்டின் வாசல் வெளியே நண்பனின்
குரல்கேட்க மனதிலோர் நிமிடம் அவனுடை
உருவம் முன்னே நிற்க எட்டிப்
பார்த்தேன் நண்பனில்லை யெவரோ நிற்க
நானும் வியந்தேன் என்னமூளைச் செயல்திறன்
குரலைக் கேட்க நண்பனின் உருவம்
மனக்கண் முன்னேத் தந்தது
கடவுள் தந்த நமதுகம்ப் யூடரே


.......

எழுதியவர் : பழனி ராஜன் (4-Nov-22, 9:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே