மனதுக்குள் நித்தம் நடக்கும் மரணம் 555

***மனதுக்குள் நித்தம் நடக்கும் மரணம் 555 ***
நெஞ்சினிலே...
இருளை விரட்டும் பகலை போல
உன்னை தொடர்ந்தேன்...
முடிந்தவரை உன்
இதயத்துடன் போராடினேன்...
உனக்குள்
நான் வாழ்ந்திட...
இளகாத உன் மனதிடம்
உருகி நிற்க ஆசையில்லை...
நீ கட்டியணைத்து முத்தம்
வைத்த என் கன்னத்தில்...
இன்று ரோமங்கள்
பல சூழ்ந்திருக்கிறது...
கூடியிருந்த நாட்களில் நீ
கொடுத்த இன்ப துன்பங்களை...
அணுஅணுவாய்
நினைத்து வாழ்வதா...
அணுஅணுவாய் நினைத்து
மரணிப்பதா தெரியவில்லை...
உள்ளத்தின் வலிகளை
கண்கள் சொன்னாலும்...
இதழ்கள் எல்லோரிடமும்
மூடிமறைக்கிறது...
மரணிக்கும்வரை உன்
மனதில் வாழ ஆசையில்லை...
உன்னோடு
சேர்ந்து வாழ ஆசை...
மனதுக்குள் நித்தம்
நடக்கும் மரணம்...
ஒருநாள் மண்ணில் நடக்கும்
பல நினைவுகளை சுமந்துகொண்டு...
நினைவுகளில்
நீ மட்டுமே இருப்பாய்.....
***முதல்பூ.பெ.மணி.....***