கண்ணீரின் பக்கங்கள்தான் காதல் 555
***கண்ணீரின் பக்கங்கள்தான் காதல் 555 ***
என்னவளே...
உலகம் யாருக்கும்
சொந்தமில்லை என்கிறார்கள்...
நானும் அப்படிதான்
வாழ்ந்தேன் உன்னை காணுமுன்...
நீதான் என்
உலகமென தெரிந்தபிறகு...
பூவுலகம் எனக்கு
மட்டுமே சொந்தமென...
எல்லோரிடமும்
வாதாட வைக்கிறது...
தூறல் போடும் மேகத்தை
கைநீட்டி ரசித்தவன் நான்...
இன்றோ ஓடி
ஒளிந்துகொள்கிறேன்...
உனக்கு பிடிக்காத மழை
எனக்கு எப்படி பிடிக்கும்...
காய்ந்த இலைகள் கல்பட்டு
நொறுங்குவது போல...
உன் பிரிவில் நொறுங்கிய
என் இதயத்தை நீ உணர்வாயா...
கண்ணீரின் பக்கங்கள்
ஆயிரம் இருந்தாலும்...
உயிர் கொண்ட
காதலின் பக்கங்களே...
நினைக்கும் போதெல்லாம்
கலங்க வைக்கிறது கண்களை...
நீ
என்னுள்தான் இருக்கிறாய்...
மனதுக்கு தெரிந்தாலும்
கண்களுக்கு தெரிவதில்லை...
உன்னில் நான்
வாழ்ந்த சுவடுகள் இருந்தால்...
மீண்டும்
என்னைத்தேடி வந்துவிடு...
இன்னும் குறையாத
காதலோடுதான் காத்திருக்கிறேன்...
நான்
இன்றும் உனக்காக.....
***முதல்பூ.பெ.மணி.....***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
