இதயம் பரிமாறியது ஒரு நிமிடத்தில் 555
***இதயம் பரிமாறியது ஒரு நிமிடத்தில் 555 ***
ப்ரியமானவளே...
நீயும் நானும் பிறந்து வளர்ந்தது
வெவ்வேறு நகரத்தில்...
நாம் கல்வி
பயின்றது ஓரிடத்தில்...
காதல் மலர்ந்தது
பார்த்த நிமிடத்தில்...
இதயம் பரிமாறியது
ஒரு நிமிடத்தில்...
உன் கால் கொலுசின் சப்தம்
நான் கேட்டு ரசிக்கிறேன் நித்தம்...
இரவுகளின் இடை இடையே
உலாவரும் உன் நினைவுகள்...
நம் தலையெழுத்தில் விதியின்
விளையாட்டு...
உனக்கும் எனக்கும்
இடைவெளி கலியுகத்தில்...
இன்னொரு யுகத்தில் இடைவெளி
இல்லாமல் கைகோர்க்கலாம்...
மனதில் தோன்றி
உயிரை குடித்த காதல்...
இதயத்தில் உருவாகும் மரணத்தின்
வாசலுக்கு வழிகாட்டும்...
வளையல் கொண்ட
உன் வலது கையால்...
என் இடது
கையை பற்றலாம்...
கலியுகத்தில்
காலன் முந்திக்கொண்டான்...
இன்னொரு யுகத்தில்
நாம் முந்திக்கொள்வோம்...
இன்ப
வாழ்க்கை சிகரத்தில்.....
***முதல்பூ.பெ.மணி.....***