என்றும் உனக்காக நான் இருக்கிறேன் 555

***என்றும் உனக்காக நான் இருக்கிறேன் 555 ***
உயிரானவளே...
நெஞ்சினில் புதைந்திருக்கும்
உன் நினைவுகள்...
இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடுகிறது...
உயிருக்குள்
உண்டான வலிகளை...
ஊமையாக அழுது
தீர்த்து கொள்கிறேன்...
போகர் எழுதிய ஏட்டு
ஓலைகளை நான் படிக்கவில்லை...
படித்திருந்தால் நானோ
கூடுவிட்டு கூடுபாய்ந்து...
நீ தினம்
கொஞ்சி விளையாடும்...
உன்வீட்டு ஆசை
கிளியாகமாறி இருப்பேன்...
சிறிய பூவினுள் பெரியக்கனி
ஒளிந்திருப்பது போல...
என் சின்ன இதயத்தில் மாபேரழகியாக
ஒளிந்திருப்பது நீதானடி...
கருவை சுமக்கும் போது பெண்
சுகமான வலியாக சுமப்பாள்...
நானோ சுமையாக இல்லாமல்
சுகமாக சுமக்கிறேன் உன்னை...
ஏக்கத்தோடு அன்று
உனக்காக காத்திருந்ததிற்கும்...
கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
அன்று எனக்காக நீ
இருந்தாய், இன்று இல்லை...
என்றும் உனக்காக
நான் இருக்கிறேன்...
மறந்துவிடாதே காதலை
மறந்து போல என்னையும்.....
***முதல்பூ.பெ.மணி.....***