என் உள்ளத்தில் காதல் வற்றாது 555

***என் உள்ளத்தில் காதல் வற்றாது 555 ***
ப்ரியமானவளே...
பிரிவென்னும்
காதல் மனசிறையில்...
நீயும் நானும் இன்று தனித்தனி
தீவாக வாழ்கிறோம்...
ஊமையாகிப்போன உன்
இதயத்திடம் கேட்கிறேன்...
என்னை மறந்து நீ
சென்றது ஏனென்று...
தினம் உனக்காக காத்திருந்து
பேசிய வேப்பமரம்கூட...
இன்று பட்டுப்போய்விட்டது
இடியின் தாக்கத்தில்...
உன் வார்த்தை
இடியின் தாக்கத்தில்...
நானும் கொஞ்ச கொஞ்சமாக
சாகிறேன் உன் பிரிவில்...
கைபேசியில் இருக்கும்
உன் எண்ணிற்கு...
தினம்
குறுந்செய்தி அனுப்புகிறேன்...
நீ தடைசெய்யப்பட்ட
என் எண்ணில் இருந்து...
உனக்கு குறுந்செய்தி
வராது என்று தெரிந்தும்...
தடையில்லாமல்
நான் அனுப்புகிறேன்...
நீ பேசாத நாட்கள் எல்லாம்
எனக்கு யுகங்களாக செல்கிறது...
என் கண்களில் கண்ணீர்
வற்றி போனாலும்...
என் உள்ளத்தில் காதல்
என்றும் வற்றாது என்னுயிரே.....
***முதல்பூ,பெ.மணி.....***