சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது - அறுசீர் ஆசிரிய விருத்தம்
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 /.மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
..சூன்ய ஞானம்;
தன்சொல்லே சரியென்று தப்பிதமாய் வாதாடுந்
..தத்தி என்பேன்!
அன்றாடங் கூறுவது தப்பென்றே சுட்டிடினும்
..அத்த வற்றைத்
தன்குற்றம் என்றறியாத் தற்குறியை என்னென்பேன்
..தவிப்பில் நின்றே!
– வ.க.கன்னியப்பன்