காந்த சிந்தூரம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
காந்த சிந்தூரம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
பத்தியம் புளியுப் பின்றேற் பலிதமாம் வாரத் துள்ளே
நத்திடி லிரண்டு வார நவிலுமிச் சாபத் யங்கொள்
கத்தரிக் காய கத்தி கடுகுகூ சுமாண்ட மெள்ளு
கொத்தவ ரைக்காய் மாங்காய் கூலக்கா யிவையா காதே
- பதார்த்த குண சிந்தாமணி
பொருளுரை:
புளியும் உப்பும் நீக்கினால் ஒரு வாரத்திற்குள் பயனைத்தரும்; அவற்றை இச்சா பத்தியமாக உண்டால் நோய் குணமடைய இரு வாரங்களாகும்;
(இச்சா பத்தியமென்பது கத்தரி, அகத்தி, கடுகு, பூசனி, எள், கொத்தவரை, மாங்காய், பலாக்காய் இவற்றை நீக்கவேண்டும்)