தாம்பிர பற்பம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

புளியொன்று தவிர வெல்லாம் புசிக்கினு நவையு றாதை
யிளைபெரு நெருப்புக் கீர மில்லையென் பதுபோ லாகும்
அளைமுசல் லிகுசங் காடி யாமில மடாது பாகற்
சுளையர மகட்ப ழம்நெய் சுதைசருக் கரைமா நன்றே

- பதார்த்த குண சிந்தாமணி

புளி தவிர்த்து மற்றன புசித்தாலும் தவறில்லை; புளித்த தயிர், முயல் கறி, எலுமிச்சம் பழம், காடி, நெல்லிக்காய் இவை கூடாது, பலாச்சுளை, வாழைப்பழம், நெய், சுண்ணாம்பு, சருக்கரை இவை ஆகும் என்பர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-22, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே