கம்பு கம்பு கம்பு

என்னடி நீதிமன்றத்தில் கூப்படற மாதிரி மூணு தடவை கூப்பிட்டும் யாரும் வரல. யாரடி கம்பு. கடையில் விக்கிற கம்பு காலு கை மொளச்சு கூப்பிட்டா ஓடி வருமா?
@@@@
யாரு மூணு தடவை கூப்பிட்டது?
@@@@@
வெளில விளையாடிட்டு இருக்கிற ஒரு பையன் தான் கூப்பிட்டான்.
@@@@@
கம்பு என் பையன் தான் பாட்டி. அவனுக்கு மூணு வயசு ஆகுது.
@@@@@@
எதுக்கு அவனுக்கு 'கம்பு'னு பேரு வச்ச? சிறு தானியங்கள் பேரையெல்லாம் மனுசங்களுக்கு யாராவது வைப்பார்களா?
@@@@@@
பாட்டி, இந்தில 'மரம், கொடி'னெல்லாம் பேரு வைக்கிறாங்க. நம்ம தமிழர் எல்லாம் அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களைத் தான் வைக்கிறாங்க. எனக்கு நீங்க வச்ச பேரு 'முல்லை'. நான் என் பேரை என் கணவரின் விருப்பப்படி 'நைனா' (Naina=Eyes) -னு மாத்திட்டேன். இந்திப் பேரு.
@@@@@@
ஏன்டி முல்லை சென்னையில் இருக்கிறவங்க தான் "இன்னா நைனா. இஸ்துக்குனு"னெல்லாம் பேசுவாங்க.
@@@@@
பாட்டி அந்த நைனா வேற. இந்த நைனா வேற.
@@@@@@@
சரி 'கம்பு'?
@@@@@@
'கம்பு' இந்திப் பேரு இல்ல. இது ஒரு வெளிநாட்டு மொழில இருக்கிற பேரு. அழகான அர்த்தமுள்ள பேரு.
@@@@@@@
அழகான அர்த்தமுள்ள பேரா இருக்கலாம். நம்ம சனங்களுக்கு சிறு தானியமான 'கம்பு'தானே தெரியும். சனங்க இந்தப் பேரைக் கிண்டல் பண்ணமாட்டாங்களா?
@@@@@@@@
பாட்டி, கம்பு "இந்திப் பேரு"னு சொன்னாங்க போதும். நம்ம மக்கள் "ஸ்வீட் நேம்"னு சொல்லுவாங்க.
@@@@@@@@
என்னமோ போடி. சுவீட்டு நேமுடி முல்லை. இல்ல. இல்ல. நைனா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kambu = Handsome king. Iranian (Persian), Indian feminine name.

எழுதியவர் : மலர் (17-Nov-22, 7:36 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : kambu kambu kambu
பார்வை : 89

மேலே