வானம்வரைக் காதல்

🌹வானம்வரைக் காதல்🌹
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

தொலைதூர இருளில் தென்படும்
சிற்றொளி

வழிகாட்டும்
விண்மீனா

வாராத
வால்மீனா

மோதி வெடித்திடும்
எரிமீனா

குழப்பம் தரும்
குறுங்கோளா

அவிழ்க்கப்படாத முடிச்சுகளோடு
எத்தனைக் காலம்தான்
இருளில் திரிந்திட இயலும் !

ஓடமும் ஒருநாள்
கண்டு கொள்ளும்
கலங்கரைத் தீபத்தின் மெல்லொளியை

அன்று
கரையேறும் மகிழ்வுடனே!

யாதொன்றும் அறியாது
எல்லா இரவிலும்
வந்து தவித்திடும்

வானத்து மீனினங்கள் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (18-Nov-22, 6:59 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 191

மேலே