பைத்தியக்காரன்

சட்டத்தை சாதகமாக்கி சரசமாடும்
பணக்கார வர்க்கத்தின் மத்தியில்
விழதுடிக்கும் விட்டதை நோக்கி
விடிவு காலம் பிறக்காதா என்று
விண்வெளி ஆராய்ச்சி செய்கிறான்

--பாவம் அவனொரு பைத்தியக்காரன்

ஏழை பணக்காரன் பாகுபாடு மாற
வேண்டுமென்று மேடை தோறும்
முழக்கமிடும் அரசியல் வாதியே
தன் வாழ்க்கையில் மாபெரும்
மாற்றம் செய்வாரென்று நினைக்கிறான்

--பாவம் அவனொரு பைத்தியக்காரன்

மேடையில் பேசியப் பேச்சுக்கள்
ஏடுகளில் வந்து விட்டதாயென்று
ஏடுகளை தேடுகிறான் அரசியல் வாதி
பேசியவன் எங்கே எங்கேயென்று
தேடி அலைகிறான் பசித்தவன்

--பாவம் அவனொரு பைத்தியக்காரன்

**இந்த கவிதையை நான் 1980 களில் எழுதியது. 40 வருடங்கள் கடந்து விட்டது.
என் கவிதையின் நாயகன் இன்றும் பைத்தியக்காரனாக தான் இருக்கிறான்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Nov-22, 9:21 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paithiyakaaran
பார்வை : 321

மேலே