கனவினில் ஓர் சுகம்

அவள் சிரிப்பினிலே
ஒரு ராகம் கண்டேன்
அவள் விழியினில்
ஒரு ஒளியை கண்டேன்
அவள் நடையினில்
ஒரு நதியை கண்டேன்
அவள் நினைவினிலே
ஒரு சுகம் கண்டேன்...!!

நதியை பார்த்து
நடை பயின்ற ரதியே
உன் பதியென
நான் வர ரெடியே
உன் முடிவை கேட்டு
நிற்கிறேன் கொடியே...!!

அவள் மௌனம்
சாதித்தாள்
மௌனம் சம்மதத்திற்கு
அடையாளமென்று எண்ணி
உரிமையோடு
அவள் தோள் மீது
கைப்போட்டேன்...!!

ஆனால்.. திடீரென
சேவற் கொடியோன்
குரல் கேட்டு
கண் விழித்தேன்
திடுக்கிட்டேன்....
தீயில் நெஞ்சமானேன்
நடந்தது யாவும் கனவென்று
கனத்த நெஞ்சை
படுக்கையில் போட்டு
உறக்கம் கெட்டேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Nov-22, 6:09 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanavinil or sugam
பார்வை : 969

மேலே