மீண்டும் மாடசாமி
பாடல் வரிகள்: நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
மாடசாமி: உனக்கே நீ ஏன் பிறந்தே என்ன செஞ்சேன்னு தெரியல. அப்புறம் ஊரார்க்கு என்ன உபதேசம்?
பாடல் வரிகள்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
மாடசாமி: ஒரு சொல்லுன்னுட்டுதான் ஆரம்பிப்பீங்க. ஆனா லேசுல முடிக்கமாட்டீங்க.
பாடல் வரிகள்: ஒண்ணாயிருக்க கத்துக்கணும் இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
மாடசாமி: அதெல்லாம் கூட்டுக்குடும்பம் இருந்த காலம்பா. இப்போ நீ சொல்றதெல்லாம் வேலைக்கு ஆகாது.
பாடல் வரிகள்: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
மாடசாமி: அந்தமாதிரி இடமெல்லாம், நீ எவ்வளவு வாடகை கொடுத்தாலும், இந்த உலகத்துல கிடைக்காது. நிம்மதி வேணும்னா ஒரேடியாக மேலே போய்டவேண்டியதுதான்.
பாடல் வரிகள்: உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்
மாடசாமி: மொதல்ல கேள்வியை கேளு, பின்னால பார்க்கலாம் அதுக்கு மெய் சொல்லணுமா இல்ல பொய் சொல்லணுமான்னு.
பாடல் வரிகள்:பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை , என்னென்று நான் சொல்லலாகுமா?
மாடசாமி: இன்னாபா கன்ப்யூஸ் பண்றே, பொண்ணொன்று கண்டேன்னு சொல்ற, கூடவே பெண் அங்கு இல்லைன்னு சொல்றே, பொண்ணு பெண்ணு எல்லாம் ஒரேமாதிரியான பிரச்சினைதான்.
பாடல் வரிகள்:நேற்று நீ சின்ன பாப்பா, இன்று நீ அப்பப்பா
மாடசாமி: ஏன்யா இந்த மாதிரி டூப் அடிக்கிற, நேத்து சின்ன பாப்பாவாம் இன்னிக்கு அது அப்பாவாம். ஒரு நாள்ல ஆற காரியமா இது.
பாடல் வரிகள்: பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு.
மாடசாமி: சரிப்பா, நீ சொல்றதையும் இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டுடறேன்.
பாடல் வரிகள்: வீடு வரை உறவு, வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
மாடசாமி: படிச்சவன் மாதிரிதான் பாடறே, கடைசி வரைக்கும் வர்ற ஒரே ஆளு வருமானவரி அதிகாரின்னு தெரியலையே உனக்கு.
பாடல் வரிகள்: நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
மாடசாமி: நான் கண்ணாலம் பண்ணப்போனேன், ஒரு கழுதை வாங்கி வந்தேன்.