மீண்டும் மாடசாமி 1

பாடல் வரிகள்: நான் உன்னை அழைக்கவில்லை. என் உயிரை அழைக்கிறேன்
மாடசாமி: அப்போ எதுக்கு என்னை பார்த்து இந்த பாட்டை பாடறே?

பாடல் வரிகள்: அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா
மாடசாமி: ஆமாம் பெரிய விஞ்ஞானி, கண்டுபிடிச்சிட்டாராம் உண்மையை

பாடல் வரிகள்: கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி..ஈஈஈ....விவசாயி
மாடசாமி: எலன் மஸ்க் எனும் முதலாளி விரட்டியடித்த அதிகாரி பராக் அகர்வால்... ஆஆஆ... பராக் அகர்வால்

பாடல் வரிகள்: ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
மாடசாமி: புரிஞ்சா மாத்திரம் என்னய்யா பண்ணி கிழிக்கப்போறே?

பாடல் வரிகள்: கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்
மாடசாமி: மனிதன் கடவுளாகப் பிறக்கவேண்டும். அவன் அட்மின்னா வேலை செஞ்சி திண்டாட வேண்டும்.

பாடல் வரிகள்: புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழைப் பொழிகிறது
மாடசாமி: ஓசியில் எங்களையும் சிம்லா கூட்டிக்கின்னு போனா நாங்களும் உன்னமாதிரிதான் பாடுவோம்.

பாடல் வரிகள்: நல்லவர்க்கெலாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா, தெய்வத்தின் சாட்சியம்மா
மாடசாமி: ஏம்பா இந்தமாதிரி நொந்து போய் குழம்பியிருக்கே. கோர்ட்டுல இந்த ரெண்டு சாட்சியும் வேலைக்கு ஆவாது.

பாடல் வரிகள்: அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
மாடசாமி: ஏன்யா கேணத்தனமா பாடறே? நீலம், வெள்ளை, கருப்பு, செவப்பு இந்தமாதிரி கலரையெல்லாம் நீ வானத்துல பாத்ததே இல்லாயா?

பாடல் வரிகள்: உன்னைப்பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும்
மாடசாமி: அப்போ என்னை பாக்காம வேலையை பார்த்துகின்னு போயா.

பாடல் வரிகள்: காதல் ராஜ்ஜியம் எனது, அங்கு காவல் ராஜ்ஜியம் உனது
மாடசாமி: சுத்தி வளைக்காம, நான் செக்யூரிட்டி வாட்ச்மேன்னு சொல்லிட்டு போயேன்யா.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (20-Nov-22, 3:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 95

மேலே