அம்மாவுக்காக
ஆண்டவனே நீ என் தாய்க்கு அடுத்துத்தான் - ஏனென்றால்
இதுவரை நான் நடந்ததெல்லாம் அவள் கரங்களை பிடித்துத்தான்...
இந்நாள்வரை ஆயிரம் கவிதைகள் அம்மாவுக்காக....
இருக்கட்டும் என் கவிதையும் அந்த வரிசையில் அடுத்தபடியாக...
காலமும் போதாது காகிதமும் போதாது தாயின் அன்பை கூற....
இருப்பினும் ஒரே வரிகளில் எழுதிவிட்டேன் இதற்குமேல் வேறென்ன கூற...? அம்மாவுக்காக...!