ஓய்வு

ஓய்வு!

சிறுகதை
ஆக்கம்
அறந்தை ரவிராஜன்
***** ****** ******

நவநீதன் அக்ரி டிபார்ட்மென்ட்ல
ஏ.டியா வேலை பார்த்து இப்ப ரிட்டையர்டு ஆகி இரண்டு வருஷம்.
போனதே தெரியலை...நல்ல ஓய்வு...
பொழுது போகலைனா ஐந்தாவது
படிக்கிற அவரோட அருமைப் பேரன்
அகிலனோடுதான்.அவன் ரொம்ப
ஷார்ப்..தாத்தாவை ஏதாவது கேள்வி
கேட்டு பதில் சொல்றவரைக்கும்
தொடர்ச்சியா கேள்வி கேட்டுக்கிட்டே
இருப்பான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை...
அகிலன் தாத்தா பக்கத்தில் போர்ட்டிக்கோவில் உட்கார்ந்திருந்தான். பகல் 12 மணி
இருக்கும்.சரியான கோடை வெயில்.

வீட்ல உபயோகப்படாத பொருள்
எதுவா இருந்தாலும் நல்ல விலை
கொடுத்து எடுத்துக்கிறோம்மா ஓடாத சைக்கள் ..தெரியாத டி.வி உடைஞ்ச கட்லு...
இப்படி எதுவானாலும்...
சைக்கிளில் இந்த வேகாத வெயிலில் அறுபத்தைந்து வயது
மதிக்கத்தக்க பெரியவர் கூவிக்கொண்டே வந்தார்.
நவனீதன்
அவரைப் பார்த்துவிட்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். தாம் பாதுகாப்பான சுழலில்
இருப்பதைப்போல
உணர்ந்தார்...
அந்த பெரியரைப் பார்த்துவிட்டு..

தாத்தா!. தாத்தா!. எல்லோரும் வீட்ல
சாப்பிடுறாங்கல்ல.. அவங்களுக்கு
பணம் ஏது தாத்தா? .......அகிலன் கேட்டான்.

வேலைக்கு போயி சம்பளம்
வாங்கித்தான்பா..
அப்ப நீ வேலைக்குப் போகலையா
தாத்தா....?

போனேன்டா..இப்ப ரிட்டையர்டு...
ரிட்டையர்டுன்னா என்ன தாத்தா?

ரிடையர்டுன்னா அறுபது வயசு
வரைக்கும்தான் வேலைக்குப்
போகனும்....அதுக்கு மேல வயசாயிடுச்சு வேலைக்கு
வரவேண்டாம்னு அரசாங்கமே ஒய்வு
கொடுத்திடுவாங்க..பென்ஷன்
உண்டு
பென்ஷன்னா வீட்ல இருந்துகிட்டே
சம்பளம் மாதிரி..

வேலை பார்க்காமன்னு சொல்லுங்க!
நவனீதன் சுதாரிப்பானார். இந்த
பெரிய தாத்தா ரிட்டையர்டு ஆகலையா?
அவருக்கு பென்ஷன் இல்லையா?
என்றவாறே பழைய சாமான்கள்
வாங்கும் முதியவரை காட்டினான்.
அவனே தொடர்ந்தான்..
அப்புறம் நம்ம பாட்டிய பாருங்க....
எப்ப பார்த்தாலும் கிச்சன்லேயே
சமைச்சுகிட்டு.....
.ஆபீஸ் போகிற அப்பா
அம்மாவுக்கு.. எனக்கு... அப்புறம்
உஙகளுக்கு..
ஏன் தாத்தா பாட்டிக்கும் வயசாயிடுச்சுதானே..?

இவங்களுக்கெல்லாம் அரசாங்கம் ரிட்டையர்மெண்டு
கொடுக்காதா...
நாமலாவது கொடுக்கலாம் இல்லியா..பாவம் பாட்டி..

முகத்தில் அறைந்தது போல
இருந்தது...அந்த பிஞ்சு உள்ளம்
உரைத்தது எனக்கு இதுவரையிலும்
உறைக்காதது ஆச்சரியமாக இருந்தது.

பங்கஜத்துக்கும் வயசு அறுபதுக்கு
மேலாச்சு...ஒரு நாளாவது ஓய்வா
உட்கார்ந்ததில்லை...மூட்டு வலி
வேற...என்னைக்காவது முடியலைனு
சொல்லி இருக்காளா?...இல்லை நானாவது ஆறுதலா எதாவது பேசி இருக்கேனா? எப்ப பாரு ஆபீஸ்..
வேலைன்னு..
இப்ப ஒருத்தர் கூட அலுவலக நண்பர்கள் விசாரிப்பது இல்லை
உண்மையான பாசமாய்.

ஆம்ளைங்க ரிட்டையர்டு ஆன
மறுநாளே ஓய்வுங்கிற போர்வையில்
எந்த வேலையும் பார்க்காம உடம்பு
ஒத்துழைக்காது அப்படினு அவர்களாகவே மனதளவில்
முடிவுக்கு வந்திடுறாங்க....

அப்புறம் என்ன....செய்தித்தாள்..
டி.வி தான்..

தன் பேரனை நினைத்தார்...
எவ்வளவு பெரிய சிந்தனையை
மிகச் சாதரணமாக கேட்டுவிட்டான்.
உண்மைதான்....
மாதச்சம்பளம் வாங்காத கோடிக்கணக்கான ஆண்கள் பெண்கள் தினசரி
வாழ்வாதாரதத்திற்கே வழியில்லாமல் வயதான காலத்திலும் உழைத்து ஓடாய்
போகிறார்கள். அவர்களுக்கு
ஓய்வுதான் எப்போது?
அவர்களும் ஓய்வூதியம் பெறும்
நாள் வருமா?...
அடுப்பங்கரையில் அல்லும் பகலும்
வாழ்க்கையே அர்ப்பணித்து குடும்பத்திற்காக வாழ்கின்ற
பெண்களுக்குத்தான் ஓய்வு
எப்போது?.....

இத்தனை நாளும் கிச்சன் பக்கமே
போகாதவர். போனார் மனைவி
பங்கஜத்தை நோக்கி பாசமாய்...

ஏம்மா... ஏதாவது நான் உதவி
செய்யவா? என்றவரை
ஆச்சரியமாக பார்த்தாள்
பங்கஜம்.

**** ***** **********

எழுதியவர் : ரவிராஜன் (22-Nov-22, 9:03 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : ooyvu
பார்வை : 189

மேலே