சிலேஷ்மம் நீக்கும் பொருட்கள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆவி னதுபால் அரத்தைமுள் ளங்கிமயில்
தூவி நறுஞ்சாம்பல் தூதுளம்தேன் - மாவோமம்
துய்ய சருக்கரை,து ழாய்விதைவி ளாம்பழமும்
ஐயமதை யோட்டும் அறி

- பதார்த்த குண சிந்தாமணி

ஆவின்பால், அரத்தை, முள்ளங்கி, மயிலிறகுச்சாம்பல், தூதுளைச் சமூலம், மலைத்தேன், ஒமம், வெள்ளைச் சர்க்கரை, துளசிவிதை, விளாம் பழம், ஆகியவை சிலேட்டும நோயைப் போக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-22, 1:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே