176 முறை, நலம், கல்வி உள்ளோர் மூத்தோர் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)

நயமறங் கல்வி யின்றி
..நனிநிதி யாற்கு லத்தால்
வயதினாற் பெரிய ரென்னல்
..மைந்தர்தந் தைதோ ளேறி
இயலித்தாம் பெரியோ ரென்ன
..இயம்பலுங் காலை மாலை
உயர்நிழ லுள்ளோர் தம்மை
..உயர்ந்தவ ரெனலு மொப்பே. 3

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”முறை, நன்மை, படிப்பு முதலிய உயிர்க்குத் துணையாகும் பொருள்களை அல்லாமல் உடலுக்குத் துணையாகும் பெருஞ்செல்வத்தால், பிறப்பால், வயதால் தம்மைப் பெரியவர் என்று சொல்லிக் கொள்வது, பிள்ளைகள் தங்கள் தந்தையின் தோள்மேல் ஏறித் தங்களைப் பெரியவரெனச் சொல்வதற்கும், காலை மாலையில் தங்கள் நிழல் நீண்டிருப்பதைப் பார்த்துத் தாங்களே பெரியவர்கள் என்று சொல்வதற்கும் ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

நயம் - முறை, நீதி, நனி - மிகுதி. குலம் - பிறப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-22, 7:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே