177 செல்வமும் வறுமையும் மாறிமாறிச் செல்லும் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 4

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)

ஏலிராட் டினவூஞ் சற்கண்
..ணேரியே சுற்றுங் காலை
மேலவர் கீழுங் கீழோர்
..மேலுமாய்ச் சுழலல் போல
ஞாலமீ தின்று யர்ந்தோர்
..நாளையே வறிய ராவர்
சீலநெஞ் சினர்கீ ழோரைச்
..சினந்திக ழார்கள் மாதோ. 4

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
-மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மேலும் கீழும் சுழன்று இயலும் இராட்டின ஊஞ்சலில் ஏறிச் சுற்றும் பொழுது மேல் தட்டில் உள்ளோர் கீழும், கீழ்த் தட்டில் உள்ளோர் மேலுமாய்ச் சுற்றுவது போல, உலகத்தில் இன்று செல்வத்தால் உயர்ந்தோர் நாளைக்கே ஏழையாகலாம். அதனால், அன்புள்ள நெஞ்சத்தினர் வறிய நிலையிலுள்ள தொழிலாளர்களைச் கோபித்து தாழ்வு படுத்தக் கூடாது அல்லவா” என்கிறார் இப்பாடலாசிரியர்.

ஏல் - இயல். சீலம் - அன்பு. இகழ்வு - தாழ்வு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-22, 7:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே