347 இல்லாப் பெயரையும் இயற்றும் வாய்ச்சொல் – இனிய சொற்கூறல் 4
கலி விருத்தம்
நன்மைபுரி யார்களு நயந்தவிர் கொடுஞ்சொல்
இன்மையெனி னல்லவ ரெனப்புகழ் படைப்பார்
தின்மைபுரி யார்களும் வழங்குமுரை தீதேல்
புன்மையுறு தீயரென எள்ளுமுயர் பூவே. 4
– இனிய சொற்கூறல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நன்மை புரியாதவர்களும் நன்மை செய்யாத கொடுஞ்சொல் சொல்லவில்லை என்றால் நல்லவரெனப் புகழ் பெறுவர்.
தீமை செய்யாதவர்களும் சொல்லும் சொல் தீயவை என்றால் இழிவான தீயவரென உலகத்தார் இகழுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பூ - உலகம்.