346 நல்லதும் பொல்லாததும் அவரவர் வாய்மொழி நவிலும் – இனிய சொற்கூறல் 3

கலி விருத்தம்

சந்தநிறை செப்பிறைவை சாணமுள தென்னக்
கந்தம தெவர்க்குநனி காட்டிவிடல் போலும்
நிந்தனையு ளாரினிய நீர்மையின ரென்ன
முந்தவவர் வாய்மொழி மொழிந்துவிடு மன்றோ. 3

– இனிய சொற்கூறல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”சந்தனம் நிறைந்த கிண்ணமும், சாணம் உள்ள கூடையும் அந்த அந்தப் பொருட்கள் இருப்பதன் மணம் காட்டி விடுவது போல, பொல்லாங்கு உடையவர், இனிய குணம் உடையவர் என்பதை அவரவர் பேசும் சொற்கள் காட்டிக் கொடுத்து விடும் அல்லவா!” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சந்தம் - சந்தனம். செப்பு – கிண்ணம்,
இறைவை - கூடை. நிந்தனை - பொல்லாங்கு.
வாய் மொழி - பேசும் சொற்கள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-22, 7:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே