கண்ணின் மணியெனக் காட்டும் ஒளியே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
இயற்சீர் வெண்டளையால் அமைந்த விருத்தம்
[நேரசையில் ஆரம்பித்தால் 11 எழுத்து,
நிரையசையில் ஆரம்பித்தால் 12 எழுத்து]
(1 3 சீர்களில் மோனை)
.ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராகும்!
கண்ணின் மணியெனக் காட்டும் ஒளியே
பெண்ணின் குணமெனப் பேசிடும் நாணம்!
உண்ணும் உணவினில் ஒன்றும் சுவையே
எண்ணும் பொழுதினில் ஏற்படும் இன்பம்!
– வ.க.கன்னியப்பன்