காந்தக் கண்ணழகி
காந்தக் கண்ணழகி
பொல்லாத அகங்காரி /
கூடையோடு வருகையிலே
யெம்மனசு சொக்குதடி/
ஊதாப்பூ தோட்டக்காரி
ஊதுபத்தி உடம்புக்காரி/
உசும்புது காதலடி
இசங்குது உயிரடி/
வெள்ளரிக்காய்க் கன்னம்
கண்டு புல்லரிப்புடன் /
உள்ளுணர்ச்சி சொக்கட்டான்
வெட்கத்துடன் ஆடுதடி /
பார்த்தும் பாராது
போல் போறவளே/
நோக்கையிலே திரை
நீக்காதடி திரவியமே/
சுண்டியிலுக்கிறது உன்
சுண்டக்காய் விழிகளடி/
மண்டியிட்டுக் கொள்கிறது
பாண்டியின் இதயமடி/