மயங்குகிறாள் ஒரு மாது

பூமுகம் காட்டியே
மோகம் விதைக்கிறாள்/
கெஞ்சிப் பேசி
நெஞ்சைக் கரைக்கிறாள்/

மதுவிழியால் பெரும்
போதை ஏற்றுகிறாள்/
கன்னம் தொட்டு
ஆசைத் தீ மூட்டுகிறாள்/

இளசு மனதை உரசியே
உசுப்பேத்துகிறாள்/
கொவ்வை இதழால்களால்
முத்தம் பதிக்கிறாள்/

மூர்க்கமாய்ப் பேசி
கேலியாய் நகைக்கிறாள்/
ஏக்க மூச்சோடு
எந்நேரமும் நோக்குகிறாள்/

என்னிடம் மயங்குகிறாள்
ஒரு மாது/
வியக்குறேன் நானும்
காரணங்கள் ஏது/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 8:02 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 82

மேலே