காதோர லோலாக்கு சங்கதி பாட
அங்கிட்டும் இங்கிட்டும்
நீயும் ஓடிக்கையிலே/
ஆடிக்கும் தொங்கட்டானில்
எம்மனசும் தங்கிடிச்சு மயிலே/
காதோர லோலாக்கு
சங்கதி பாட/
எந்நாளும் ஒன்னய
அள்ளிக்கத் என் நெஞ்சம் தேட/
தன்னால கணக்கொன்னு
போட்டுக் கிட்டேன் /
நானும் கண்ணால
நாளக் காத்துக்கிட்டேன்/
கற்றாழை முள்ளு
கண்ணுக் காரியே/
அத்திப்பழ சிவப்பழகியே
நிச்சயதார்த்தம்
பண்ணிக்க வந்துடிச்சு வேலையே /
இந்தாப் பொண்ணு
சற்று நின்னுக்கோடி/
ஆத்தாளப் பார்த்தாக்கா
தித்திப்பா பேசிக்கோடி/