கற்பனை உலகின் இளவரசி

அவளால் தோன்றிய வரிகளெல்லாம் அழகானவை
அவளை போன்றே ...!!
காகிதத்தில் இடம்பெறாமலே கலைந்தது
அவளுடனான காதலை(ஒருதலை)போன்றே....!!
கனவில்கூட கவிதை எழுத வைத்தவள்
நினைவில் கண்ணீரை பரிசாக தந்தாள் தாராளமனசுக்காரி -அவள்(ளை)
கள்ளிஎன குறை சொல்லி கண்கலங்க ஈரமில்லை......

- அவள் என்றுமே என் கற்பனை உலகின் இளவரசியே ....!!!

எழுதியவர் : சத்தியானந்தம் (3-Dec-22, 8:09 pm)
சேர்த்தது : Sathiyanantham
பார்வை : 314

மேலே