அன்றொரு-நாள் இதே நிலவில்

அன்றொரு நாள் இதே நிலவில்/
பகல் போல் ஒளியானாள்
பௌர்ணமியாள்/
பாண்டியாட தோழிகள் மெதுவாக
அழைத்திட/

வெள்ளிக்கொலுசு ஒலிபெருக்கி சங்கதி
பாடா/
துள்ளிக் குதித்து வந்தாள்
தேவதையொருத்தி/

பனிக் குளிர் உடலைக்
கிள்ளியது/
மணிக்குயிலின் அழகு கண்ணைக் கிள்ளியது/

நளினமாய்ப் பேசினாள் நாகரிகமாய் அனுகினாள்/
அயல்நாட்டுப் புறா மறுநாள்
புறப்பட்டாள்/
ஒவ்வொருவரு பௌர்ணமியும்
தவறாமல் நெஞ்சத்தில் உதிக்கின்றாள் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 8:11 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 66

மேலே