மாமா நான் மயங்குகிறேன்

மல்லு வேட்டி ராசாவே
மல்லுக்கட்டிக்காதே/
பல்லு கொட்டிப்புடும்
ஒன்னு விட்டாலே /

நேக்குப் புடிக்கல
அவ சகவாசம் /
சொன்னாக்கா கேட்டுக்கோ
சிக்கிக்காதே கைவசம் /

கறந்தபாலாக
நெனைச்சுக்காதே அது விசம் /
புலம்பிக்கும் என்னைய
பாருங்களேன் ஒரு நிமிசம் /

ஆளான காலமாய்
நூலாக போறேன் /
அகண்ட மார்புல
மாலையா வாறேன் /

சிறுக்கி நானும்
மாமா மயங்குகிறேனே/
திரும்பி நோக்கிக்காம
போய்கிறேயே ஏனோ/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 8:14 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே