கருவில் இருந்து கைக்குழந்தை வரை

ஒரு கோடிக்கும்
மேற்பட்ட விந்துஅணுக்களில்
ஒன்றன்பின் ஒன்றாய்
அழிந்து வர
நான் மட்டும் ஏனோ
முந்தி கொண்டு
கருமுட்டை முறிந்து வரும்
அமிலத்துடன் கலந்து
கருவாய்
உன் கர்ப்பப்பையில் இடம்பெயர்தேன்.

இது விஞ்ஞானமா?
இல்லை
இறைவனின் மெஞ்ஞானம்.

கருவாய் உருவாய்
மாறினேன் உன் கருவறைக்குள்.


என்னை உருவாகிய
உன்னை பார்க்க ஆவலாய்
சில காலம் உன்னுள் காத்திருதேன்.
சந்தோசத்துடனும் இருதேன்.

எதுவும் தெரியாமல்,
அன்பின் வட்டத்துக்குள், அடைக்கப்பட்டு
இல்லை, இல்லை
அரவணைக்கப்பட்டு. இருதேன்

நான் உன்னை காணும் நாள்
இதோ ! வந்து விட்டது.
ஐயோ!
உனக்கும் எனக்கும்
உறவாய் இருந்த தொப்புல்கொடி அருபடுகிறதே
.
என் கண்கள் முன்னே
எண்ணற்ற அதிசயங்கள் இருத்தபோதிலும்
படைத்தே உன்னை பார்க்க
என் இதயம் துடித்தது

அருகில்
உன் அழுகை சத்தம்
ஓஹோ !
உன் மொழி அழுகையா என்று
நானும் அழ ஆரம்பித்தேன்
வேதனையின் விளிம்பில்
நீ
இருப்பது தெரியாமல்

பிறக்கும் போதே
உன்னை அழ வைத்துவிட்டேன்.
அதற்காக என்னை மன்னித்துவிடு

உன் வேதனையில் பிறந்தவன்
என்ற சாபத்தை
முதலில் போக்கிவிடு

நீ அடைந்த வேதனைக்கு
என்னால் ஒன்றும் செய்ய முடியாது
ஆனால்
நீ வாழும் வாழ்கைக்கு
என்றும் உறுதுணையுடன் இருப்பேன்
உன் அரவணைப்பிலே



எழுதியவர் : v.palanikumar (8-Aug-10, 12:08 am)
பார்வை : 441

மேலே