சென்னையில் கேரளா தேநீர்க் கடை

சென்னையில் புதிதாக கேரளாவிலிருந்து வந்த ஒருவர் தேநீர்கடை ஒன்று துவங்கினார். முதல் மாதத்தில் அவரும் மற்றவர்களும் பட்ட பேச்சு உபாதைகள்:

கடைக்காரர்: எத்ர டீ ? (எவ்வளவு தேநீர்)
வந்தவர்: சக்கர டீ
&&&
வந்தவர்: குடிக்க தண்ணீர் கொடுங்க
கடைக்காரர்: சாதா வெள்ளமா ச்சூடு வெள்ளமா?
வந்தவர்: ஐயோ, போன மாசந்தான் வெள்ளத்தால் எங்க ஏரியாவே மூழ்கிடுச்சி. இன்னொரு வெள்ளமா அதுக்குள்ள?
&&&
வந்தவர்: பட்டர் பிஸ்கட் கொடுப்பா
கடைக்காரர்: ரண்டு கொடுக்கட்டே
வந்தவர்: எனக்கு நீ ஏம்பா வாடகை தரணும்?
&&&
கடைக்காரர்: டீயில ஈ பன்னை தோச்சுக்கோ
வந்தவர்: எனக்கு ஈ மொய்க்கிற பண்ணு வேணாம்ப்பா
&&&
கடைக்காரர்: ஞான் நாள நாட்டுக்குப் பூவான்
வந்தவர்: சீனா நாட்டுக்குப்போய் டீக்கடை வைக்கப்போறாயா?
&&&
கடைக்காரர்: ஞான் சம்சாரிக்கிறது மனசிலாயோ
வந்தவர்: நீ மட்டும் இல்லப்பா நானும் சம்சாரிதான்
&&&
கடைக்காரர்: நீங்கள் வீட்டில பட்டி பூச்சா உண்டோ? (நாய் பூனை இருக்கிறதா)
வந்தவர்: எனக்கு ரொம்ப பக்தி பூஜை இதெல்லாம் கிடையாது. ஆனா என் மனைவிக்கு ரொம்ப பக்தி பூஜை எல்லாம் உண்டு.
&&&
கடைக்காரர்: எனிக்கி கொழா புட்டங்கில் வலிய இஷ்டம்
வந்தவர்: எங்க வீட்டில கொழா புட்டுக்கிச்சுன்னா ப்ளம்பரை கூப்பிடுவோம்.
&&&
கடைக்காரர்: நிங்கள் இவிடே சாயா குடிக்கத் திருச்சி வரணும்
வந்தவர்: திருச்சி தான் என்னோட ஊரும். அங்கே வந்தா என் வீட்டுக்கு வாப்பா.
&&&
கடைகாரர்: பழம்பொரி இவிட கண்டில்லா (பொரித்த நேந்திரம்பழம்)
வந்தவர்: பழமும் பொரியும் ஒரே கடையில் கிடைக்காதுப்பா.
&&&
கடைக்காரர்: நிங்கள் பக்ஷணம் கழிச்சோ? (நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா)
வந்தவர்: இப்போ பக்ஷணம் சாப்பிட்டா அப்புறம் சாப்பிடுவதற்கு ரொம்ப லேட்டா ஆகிவிடுமே.
&&&
வந்தவர்: இங்கே மாயாண்டி தெரு எங்கே தெரியுமா?
கடைக்காரர்: எனக்கரியில்லா (எனக்குத்தெரியாது)
வந்தவர்: ஆமாம், எங்களுக்கும் பெரிசா ஒண்ணும் அறிவு இல்ல.
&&&

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Dec-22, 11:53 am)
பார்வை : 77

மேலே