இளஞ்சோடிகள் ஆர்ப்பாட்டம்

ஒருவர்: பார்த்தா இருவரும் காதலர்கள் மாதிரி தெரியுது. இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லையா?
இளைஞன்: கல்யாணம் செய்துகொண்டால் அப்புறம் காதல் எப்படி பண்ணுவது?
ஒருவர்: ???

ஒருவர்: என்னங்க நீங்க ரெண்டு பெரும் பண்றது கொஞ்சமும் சரியில்லை. பப்ளிக் பூங்காவில் ஆலமரத்தின் கீழ் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு லூட்டி அடிக்கிறீர்கள். இதையெல்லாம் வீட்டில் வச்சுக்கவேண்டியதுதானே?
இளைஞன்: எங்க ரெண்டுபேருக்கும் இன்னும் கல்யாணமே ஆகலை.அப்புறம் வீட்டில் எப்படி கட்டிப்பிடிக்கமுடியும்? சினிமா படத்துல மாத்திரம் காதலன் காதலி எந்த இடத்தில் கட்டிபிடிச்சாலும் ரசிக்கிறீங்க, கண்டுக்கிடமாட்டீங்க, என்னங்க உங்க நியாயம்?
ஒருவர்: ???

ஒருவர்: காலேஜ் முடிப்பதற்கு முன்னாலேயே ஒருத்தரை ஒருத்தர் காதல் பண்ணுகிறீர்கள். காலேஜ் முடிஞ்சியிருந்தா என்னென்ன பண்ணுவீங்களோ?
இளைஞன்: காலேஜ் முடிஞ்சதுன்னா ஒருத்தர் இன்னொருத்தரைக் காதல் பண்ணுவாங்க. அவ்வளவுதான்.
ஒருவர்: ???

ஒருவர்: கருமம் கருமம் , பீச்சு பக்கத்துல வந்து உட்கார்ந்துகொண்டால் இப்படி நூலோடு நூலைக்கோர்த்தமாதிரி கட்டிப்பிடித்துக்கொண்டு என்னென்னமோ பண்ணுறீங்க.
இளைஞன்: அது ஒண்ணும் இல்லை சார், இன்னும் மூணு நாளுல மாண்டஸ் புயல் வரப்போகுது. அதனால இப்போ ஒரே குளிர் காத்தாக இருக்குது. அதுதான் கொஞ்சம் உடம்பை சூடுபண்ணிக்கிறோம். ஹிஹிஹி.
ஒருவர்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (10-Dec-22, 12:20 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 91

மேலே