கல்யாணமாம் கல்யாணம்
ஒருவர்: ஏன் சார், நீங்க இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்கிறீர்கள்? அதுவும் வேலைக்கு போற பெண்தான் வேண்டும் என்று.
இன்னொருவர்: பின்னே என்ன சார், ஒத்த சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்?
ஒருவர்: அப்படி என்றால், உங்கள் முதல் மனைவி வேலைக்குப் போகவில்லையா?
இன்னொருவர்: சச்ச, அவள் வேலைக்கு போவதால் தான் இந்த அளவுக்காவது குடும்பம் நடக்கிறது.
ஒருவர்:???
&&&
கணவன்: கல்யாணத்தின்போது உனக்கு இருந்த அழகு இப்போது இல்லை
மனைவி: கல்யாணத்தின்போது உங்களுக்கு இருந்த அன்பு இப்போது இல்லை
கணவன்: கல்யாணத்தின்போது உனக்கு இருந்த ஒரு பணிவு இப்போது இல்லை.
மனைவி: கல்யாணத்தின்போது உங்களுக்கு இருந்த துணிவு இப்போது இல்லை.
கணவன்: கல்யாணத்தின்போது உனக்கு இருந்த ஆசை இப்போது இல்லை.
மனைவி: கல்யாணத்தின்போது உங்களுக்கு இருந்த மீசை இப்போது இல்லை.
கணவன்: கல்யாணத்தின்போது உனக்கு என் மீது இருந்த ஒரு கவனிப்பு இப்போது இல்லை.
மனைவி: கல்யாணத்தின்போது என் மீது இருந்த ஒரு கண்காணிப்பு இப்போது உங்களிடம் இல்லை.
கணவன்: கல்யாணத்துக்கு முன்பு நாம் சண்டை போட்டதேயில்லை.
மனைவி: இப்போது நம் போடும் சண்டைக்கு Sundayயே இல்லை.