நீதி தேவதை

அநீதியை கண்டால்
அலைகடலென
எழுச்சிக் கொண்டு
எல்லோரும்
பொங்கி எழுந்து
கண்டிக்க முன் வர வேண்டும்...!!

நீதிமன்றத்தில்
வழக்கறிஞர்களும்
நேர்மையான முறையில்
வழக்குகளை வாதிட்டு
நீதிமன்றத்தின் கண்ணியத்தை
காத்திட வேண்டும்...!!

நீதிமான்களும்
யாருக்கும் அஞ்சாமல்
நடுநிலை தவறாமல்
வாய்மையே வெல்லும்
என்ற சொல்லுக்கேற்ப
நீதியினை ஆராய்ந்து
வழங்கிட வேண்டும்....!!

இல்லையென்றால்
கண்ணை கட்டிக்கொண்டு
நீதிமன்றத்தில் இருக்கும்
நீதி தேவதையை
வலிமை மிகுந்தோர்
உயிருடன் பூமியில்
புதைத்து விடுவார்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Dec-22, 5:30 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : neethi thevathai
பார்வை : 574

மேலே