உறங்கும் உண்மை
குடிப்போதையில் இருப்பவன்
ஏதாவது உளறிக் கொண்டு
இருப்பான்யென்று
நினைக்க வேண்டாம்
அவனை அருகில் அழைத்துப்
பேசி பாருங்கள்
அவனது உள்ளத்தில்
உறங்கிடக்கும் உண்மைகளை
மிக தெளிவாக சொல்லிவிட்டு அமைதியாக உறங்கி விடுவான்
சில மனிதர்களோ
நமக்கெதற்க்கு வம்பென்று
உண்மைகளை உள்ளத்தில்
வைத்துக்கொண்டு
உறங்காமல் தவிப்பார்கள்...!!
--கோவை சுபா