கவி பாரதி தோன்றி 101 வருடங்கள்
சுப்பிரமணிய பாரதி நூறாண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணில் மறைந்தார்
ஆயினும் மனிதகுலத்திற்கு அவர் ஈன்ற கவிமுத்துக்கள் மறையவில்லை
ஆன்மிகம் தழுவிய உயர்ந்த இந்து தர்மத்தை நிலைநிறுத்தியவர் சங்கரர்
மனிதன் மனிதனாக வாழச் சத்தான கருத்தினை முழங்கியவர் பாரதியார்
பாரதி துப்பாக்கி ஏந்தாமல் கலம் கொண்டுப் போராடிய விடுதலை மாவீரர்
ஆங்கிலேயருக்குத் தனது எழுத்துக்களால் சூளுரைத்த துணிச்சலான சூரர்
மக்களிடையில் தேசபக்தியைத் தோண்டித் தூண்டிய நிகரில்லாத உத்தமர்
வறுமையே வாழ்கை என்றபோதும் பொதுமக்கள் சேவை செய்த தொண்டர்
சாதி மதம் இனம் குலம் இவை சமூக விரோதிகள் என்று கூக்குரலிட்டவர்
இப்பாகுபாடுகள் வேரில் ஊடுருவும் விஷம் போல எனப்பறைசாற்றியவர்
பெண்ணின் மானமே ஆணுக்குத் தன்மானம் எனக் கோடிட்டுக்காட்டியவர்
கடவுளிலும் தாய்மையைக் கண்டு உணர்ச்சிபொங்கத் துதித்துப்பாடியவர்
பாரதியாரும் அவர் துணைவி செல்லம்மாவும் பட்ட இன்னல்கள் பலப்பல
ஒருவேளை சோறின்றி இருவரது வயிறு வாடிய நாட்கள் சில அல்ல, பல
கொடிய வறுமையிலும் பறவைகட்குத் தானியமிட்ட நாட்களும் பலப்பல
செய்தித்தாள் மூலம் முற்போக்குக் கருத்துக்களை பரப்பியவர், பலே பலே
மத ஜாதி பேதம் இல்லை எனப்பாடியதால் இவர் உன்னதமான உலகக்கவி
தேசவிடுதலைக்காக வீர்க்கவிதை முழங்கியதால் இவர் ஒரு தேசியக்கவி
தமிழ் மண்ணின் புகழினை கவிதைகளில் போற்றியதால் நம் மாநிலக்கவி
தனி மனிதனுக்கு வாழ வழி கற்பித்ததால் பாரதி காலத்தால் அழியாத கவி