புது வருடம் பிறந்தது
புதுக் காலை கதிரவன் கதிர்களுடன் புது வருடம் மலர்ந்திட
புதுப்புது ஆசைகள் கனவுகள் பல மனதுக்குள் துளிர்விட
புது இலக்குகள் பல தோன்றிட புதுத் தீர்மானங்களும் வந்திட
புதுமைகள் செய்ய உள்ளமும் மனமும் ஒன்றாகி விழைந்திட
புதுத் தலைமுறைகள் நம்மை கைப்பிடித்து வழி நடத்திட
புது உறவுகளும் புது நண்பர்களும் அறிமுகம் அறிவித்திட
புலர்ந்த காலை விடியலில் புதுப்புது அர்த்தங்கள் விளங்கிட
புதுக் கடமைகள் பல வந்து குவிந்து நாம் அதை உணர்ந்திட
புதுத் தெம்புடன் உள்ளமெல்லாம் பெரு மகிழ்ச்சி பொங்கிட
புது வருடம் தரும் பலன்களை மனம் நினைத்து அசை போட்டிட
புதுப்பானையில் பொங்கிய புதுச்சோறும் மலர்ந்து சிரித்திட
புது மலர்போல் முகமெல்லாம் மலர மகிழ்ந்து கொண்டாடிட
புது வருடத்தை வரவேற்போம் உள்ளம் நிறை வாஞ்சையுடனே