460 ஆண்டவன் அன்போடு உயிர் காத்தல் பேரறம் - அறஞ்செயல் 12

அறுசீர் விருத்தம்

காய் 4 / மா தேமா

முந்தைஇறைக் கன்புபின்பு தன்னுயிர்போல் மன்னுயிரை
..முறையி னோம்பல்
இந்தஇரு விதிகளினுள் வேதமெலா மடங்குமனம்
..இன்ப மேவ
வந்தஇக பரமளிக்கும் அறமொன்றே அருந்திருவாம்
..அதன்முன் ஆயின்
சிந்தனைசிந் தனையுறச்செய் புவித்திருஏட் டிடைவரைந்த
..திருவொப் பாமால். 12

- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”முழு முதற் கடவுளுக்கு, நாம் செய்யும் அன்பும் தன் உயிர்போல் நிலைபெற்ற எல்லா உயிர்களை யும் பேணுதலும் ஆகிய இரண்டறங்களும் முறையே வீட்டின்பமும் உலக இன்பமும் நமக்குத் தருவன. இவ்விரு அறங்களில் மறைகளெல்லாம் அடங்கும். இதுவே அழியாப் பெருஞ் செல்வ வாழ்வாம்.

இதற்கு முன் அழியும் தன்மை வாய்ந்த உலகியற் செல்வத்தைப் பற்றி ஆராய்ந்தால், உலகச் செல்வம் உள்ளத்தில் கவலை தரும். அது ஏட்டில் எழுதிய செல்வம் போல் பயன் தராது” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சிந்தனை - உள்ளம். சிந்தனை - கவலை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 10:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே